இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

அரசின் ஏளனமான நலத் திட்டங்கள்: தமிழ்நாட்டின் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு தொடரும் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பம்ச திட்டம் (Scheduled
Caste Special component Plan - SCSP) மற்றும் மழைவாழ் மக்களுக்கான உள்திட்டம் (Tribal Sub Plan - TSP) ஆகியவற்றின், திட்டக்கமிசனின் வழிகாட்டதல்களை சீர்குலைக்கும் அளவுக்கு, தமிழ்நாட்டின் 2009-2010 வருடத்திட்டம் இருக்கிறது. இதைக்காண ஒருவேளை பரியார்இருந்திருந்தால் சவக்குழியில் தானே போய் விழுந்திருப்பார்.

மாநில உயர்மட்ட செயலாளரும் திட்டக்கமிசன் மாநில திட்டப்பிரிவின் இணைச்செயலாளருமான டி.கே.பாண்டே கூறியதாவது: மாநில அரசானது 2009-2010 வருடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு அம்ச திட்டத்திற்காக ரூபாய் 2,721.62 கோடியும், மழைவாழ் மக்களுக்கான உள்திட்டத்திற்கு ரூபாய் 36.36 கோடியும் ஒதுக்கியது. ஆனால் இதைக் கமிசனின் வழிகாட்டுதலின்படி உறுதிப்படுத்தவில்லை.

2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை 19%-மும் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 1% ஆகும். இதன்படி அரசானது ரூபாய் 3,250 கோடியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ரூபாய் 175 கோடியை பழங்குடி மக்களுக்கும் முறையே ஒதுக்கியிருக்க வேண்டும் என அக்கடிதம் தெளிவாக கூறுகிறது. எப்படியிருப்பினும் இது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. மற்றும் இதுதொடர்பான செயல்பாடுகள் விதிமுறை நூலின் படி ஆமை வேகத்தில்தான் செல்கிறது. தமிழ்நாட்டின் சமூகக் கண்காணிப்பக ஆய்வுக்கான யோசனை கூறும் நிபுணரான அருட்தந்தை இருதயராஜ் கூறுகையில், ''மேற்கூறிய அல்லது நியாயமாக ஒதுக்கப்படும் நிதியானது காலாவதியாகிறது அல்லது வேறு முன்னேற்றத் திட்டங்களுக்காக திசை திருப்பப்படுகிறது'' என்கிறார்.

2005 ஆம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு அம்சத் திட்டத்தின்கீழ் ரூ.500 கோடி செலவழிக்கப்பட்டது. ஆனால் சில வருடங்கள் கழித்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரூ.2,500 கோடி செலவிட்டதாகப் பொய்க் கணக்குக் காட்டுகிறது. ஆனால் பட்ஜெட் ஆய்வாளர்கள் கூறுகையில் நிதித் ஓட்டத்தில் உண்மையான விரிவுபடுத்தலில் ஒரு கண்கட்டி வித்தை என கூறுகின்றனர்.

மாநில அரசின் 1996-2009 ஆண்டுகளுக்கான வருடாந்திரத் திட்டங்களில் ரூ.14,224 கோடி தலித் மக்களுக்குக் கொடுக்காமல் மறுக்கப்பட்டிருக்கிறது. ஒதுக்கப்பட்ட நிதியானது (இலவச) தொலைக்காட்சிகள் வாங்குவதற்கும் மற்றும் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டுவதற்கும் திசை திருப்பப்பட்டிருக்கலாம் என தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் சந்தேகப்படுகின்றனர்.



செய்யத் தவறியவை

மக்கள் தொகை விகிதப்படி ஒதுக்கப்பட்ட வருவாய் எஸ்.சி.-16.2% எஸ்.டி.-8.2%

எஸ்.சி. / எஸ்.டி. நலத்துறை நிதியானது 2007-2008 இல் 8.1%, 2009-2010 இல் 6.4% -ம், 2010-2011 இல் 7.5% -ம் ஒதுக்கப்பட்டது.

வெறுமனே 14 மத்திய அமைச்சகங்கள் அல்லது துறைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றி அறிக்கை தாக்கல் செய்கின்றன. 2009-2010 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 83 அமைச்சகங்களுக்கு எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை.


-சி.சிவக்குமார், சென்னை
(17.03.2010 அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வந்தது)
மொழி பெயர்ப்பு: லியோ, மதுரை

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014