இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

இராஜபக்சேவுடன் ஒப்பந்தம்: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மன்மோகன் சிங்


'இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி' என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற எந்த அரசையும் சாராமல் இயங்கும் சர்வதேச நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த லெலியோ பஸோ என்பவரது முன்முயற்சியால் 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியிலுள்ள பொலோக்னா என்ற இடத்தில் 31 நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆகும். நோபல் பரிசு வென்ற 5 பேர் இதில் உள்ளனர். மனித உரிமைகள் மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது இதன் செயல்பாடாகும்.

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வழக்குரைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டம்


உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி 09.06.2010 முதல் மதுரை உயர்நீதிமன்ற கிளை வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் பகத்சிங், இராசேந்திரன், ராஜா, எழிலரசு, ஜெயபாரதி மற்றும் நடராஜன் ஆகிய ஆறுபேரும் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் 17.06.2010 அன்று முதல் 7 வழக்கறிஞர்களும், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இந்த வழக்கறிஞர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சர்ந்த எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு 300 பேர் கைதானர்கள். தொழிலாளர் போராட்டத்தை வளர விடாமல் தடுக்க 2000 பேர் மீது வழக்கு போடப்பட்டது.

அரசு நிர்ணயித்த பள்ளிக் கட்டணமும் அத்துமீறி செயல்படும் பள்ளிகளும்

'கல்வி - தனியார்மயம்

சாராயக்கடை - அரசு மயம்”

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும் அதன் கீழ் உள்ள வரிகளுக்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றுகிறதா? நிச்சயமாகத் தோன்றும். அவ்வாறு நாம் எந்த ஒரு விசயத்தையும் தொடர்பற்ற நிலையிலேயே எண்ண கற்பித்துள்ளது நமக்கு அளிக்கப்பட்ட கல்வி. இந்நிலை மாற வேண்டுமெனில், நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும், கேள்விகள் பல கேட்க கற்றுக்கொள்ள வேண்டும்.

போபால் விஷவாயு விபத்தில் செத்துப் போன நீதி

டிசம்பர் 2, 1984 போபாலில், மக்கள் இரவு உணவருந்திவிட்டு, எதிர்காலக் கனவுகளுடன் உறங்கச் சென்றார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தங்களுக்கு நேரப்போகும் பேராபத்தால் மீளா உறக்கத்தில் ஆழப்போகிறோம் என நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. நல்லிரவுக்கு அருகாமையில் கடுமையான இருமல் மற்றும் கண் எரிச்சல் எற்பட்டதும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அடித்துக்கொண்டு வெளியேறினர். ஊரே அலறியடித்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஓடுவதைக் கண்டு மக்கள் திகைத்தனர். ஓர் விஷவாயு அருகிலிருந்த யூனியன் கார்பைடு கம்பெனியிலிருந்து கொல்ல வந்தது. பொழுது விடிந்தபோது விஷவாயு 5,000 உயிர்களைப் பலிகொண்டிருந்தது. அக்கொடிய வாயுவின் பெயர் மெதில் அய்சோ சயனைடு.

இரும்புக் கோட்டை அமெரிக்கா பம்மிக் குலையும் தமிழ் சினிமா


இந்திய நாட்டில் ஏகாதிபத்திய ஊடுருவலும், முதலாளித்துவத்தின் அட்டூழியங்களும் செல்வ செழிப்பாக மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றும் மக்கள் பட்டினியில் வாழ்வதும், இறப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் வறுமையில் வாடினாலும், வறுமை மட்டும் அவர்களிடம் செழிப்பாக வாழ்கிறது. இதனை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பேனா முனைகளோ, பத்திரிகைகளோ செழிப்பானவர்கள் பக்கமே ஊதுகுழலிட்டுக் கொண்டிருக்கின்றன. சினிமாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. சமூகத்தின் உண்மை எதிரொளிப்புகளை திரையில் வெளிக்கொணரும் திரைப்படங்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு குறைந்து கொண்டு வருகின்றன. அப்படி வரும் திரைப்படங்கள் கூட தணிக்கை குழுவால் உண்மைகள் வெட்டப்பட்டு, சிதைந்த நிலையிலேயே வெளிவருகின்றன. மேலும், அவை முதலாளிகள் மற்றும் அவர்களது அரசை பாதிக்காத வண்ணம்தான் தயாரிக்கப்படுகின்றன.

பச்சை வேட்டை: நாகரிகத்தின் காட்டுமிராண்டி முகம்

சட்டீஸ்கர் மாநிலம், தண்டேவாடா பகுதியில் கடந்த ஏப்ரல் 6ந் தேதி சி.ஆர்.பி.எப்-ஐ சேர்ந்த 76 பேர் மற்றும் இந்த மாதத்தில் 27 சி.ஆர்.பி.எப்.-ஐ சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைப்பற்றி அனைத்து ஊடகங்களும் தன் ஜனநாயகக் கடமையாற்ற 'காட்டுமிராண்டித்தனம்”, 'பயங்கரவாதச் செயல்” என பலவாறு வர்ணித்தன. அந்த படையினருக்காக நாமும் வருந்துவோம். அவர்களது குடும்பத்தோடு சர்ந்து துக்கத்தை பகிர்ந்து கொள்வதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

ஆனால், இந்த போர் உழைக்கும் மக்களுக்கும், பணக்கார நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் போர். அதில் உழைக்கும் மக்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்திலிருந்து வரும் இராணுவத்தினர் இருப்பது காலங்காலமாக ஆளும் வர்க்கத்தினர் செய்து வரும் சூழ்ச்சியாகும். இது துரதிஷ்டவசமானது.

உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழகமெங்கும் பிரச்சார இயக்கம் - ஒரு பார்வை

மோசமடைந்து கொண்டே செல்லும் இன்றைய சமூகச் சூழலில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் வெடித்து கொண்டு இருக்கின்றன. நம் நாட்டின் அரசியல்வாதிகளும், அவர்களை நிர்ணயிக்கும் தரகுப் பெரு முதலாளிகளும், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் உழைக்கும் மக்களின் உரிமைகள், உடமைகள், உணர்வுகள் ஆகிய அனைத்தையும் பறித்தெடுத்து அவர்களை நடை பிணங்களாக ஆக்க நினைக்கின்றனர். இவர்கள் அனைவரின் தாரக மந்திரமே 'பயன்படுத்தித் தூக்கியெறிதல்;” என்பதுதான். பிணந்தின்னிக் கழுகுகளாக திகழும் இத்தகைய கூட்டங்களை எதிர்த்து தங்களுடைய உரிமைகளை மீட்டெடுக்கப் போராடும் மக்களுக்காக நாம் இணைந்து போராடுவது தான் உண்மையான நாட்டுப்பற்று.

பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை... பாகம் - 7

-மனுவேல்

இதுவரை...

இயற்கை மற்றும் சமுதாயத்தின் விஞ்ஞானப் பூர்வமான வரலாற்றை சுருக்கமாக அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை துவங்கப்பட்டது. பாகம் - 1 இல் சில கேள்விகளைத் தொகுத்துக் கொண்டு இக்கட்டுரையைத் துவக்கினோம். பாகம் 6 வரை, உலகம் தோன்றியது எப்படி? உயிர்கள் தோன்றியது எப்படி? மனிதன் தோன்றியது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டோம். இந்த இதழில் நாம் சமுதாயம் தோன்றியது எப்படி? என்று பார்க்க இருக்கிறோம். இனி வரும் இதழ்களில் நாம் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை காண்போம்.

அரசின் ஏளனமான நலத் திட்டங்கள்: தமிழ்நாட்டின் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு தொடரும் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பம்ச திட்டம் (Scheduled
Caste Special component Plan - SCSP) மற்றும் மழைவாழ் மக்களுக்கான உள்திட்டம் (Tribal Sub Plan - TSP) ஆகியவற்றின், திட்டக்கமிசனின் வழிகாட்டதல்களை சீர்குலைக்கும் அளவுக்கு, தமிழ்நாட்டின் 2009-2010 வருடத்திட்டம் இருக்கிறது. இதைக்காண ஒருவேளை பரியார்இருந்திருந்தால் சவக்குழியில் தானே போய் விழுந்திருப்பார்.

மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு... இலங்கைக் கடற்படையிடமிருந்து இந்தி மீனவHகளைக் காப்பாற்ற சிறந்த வழிகள் - 7

1. குண்டு துளைக்காத கார் போல, குண்டு துளைக்காத படகு வாங்கிக் கொடுக்கலாம்.

2. சிங்கள இராணுவம் துன்புறுத்தும் போது வலிக்காமல் இருப்பதற்கு மரத்துப் போகும் ஊசி போடுவதற்கு உதவியாக ஒரு மருத்துவரை படகில் மீனவருடன் அனுப்பலாம்.

3. படகுகளில் இந்திய தேசிய கொடிக்குப் பதிலாக சிங்கள தேசியக் கொடியைப் பறக்கவிட ஆலோசனை வழங்கலாம். (அதனால் ஒரு வேளை மன்னிப்பு கிடைக்கலாம்.)

4. கரையில் இருந்தபடி நீளமான மூங்கிலாலான தூண்டிலைக் கொண்டு மீன்பிடிக்கச் சொல்லலாம்.

5. கடற்கரையில் குளங்கள் வெட்டி அதில் மீன் வளர்த்து பிடிக்கச் சொல்லலாம்.

6. மீனவர்கள் படகுவிட ஆசைப்பட்டால் மழை நேரங்களில் காகிதப் படகு செய்து விடச் சொல்லலாம்.

7. மீனவர்கள் பொழுது போக்குவதற்கு தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து மானாட, மயிலாட, எல்லாமே சிரிப்புதான், கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கச் சொல்லலாம்.

குறிப்பு: நாங்க ஏதாச்சும் இறையாண்மையை மீறியிருந்தால் மன்னிச்சிடுங்க சாமியோவ்.

-எம்.பழனிமுருகன்,

தஞ்சாவூர்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014