சாளரம்
வெளிச்சம் உள்ளே வரட்டும்...
இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்
வியாழன், ஜூலை 17, 2014
ஞாயிறு, ஜனவரி 01, 2012
முல்லைப் பெரியாறு அணை: விறகாகும் மக்கள்.. குளிர்காயும் அரசுகள்...
இன்று தமிழகத்தை மிகப் பெரிய அளவில் உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. தமிழகத்தின் தென் பகுதிகளான தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக தன்னெழுச்சியாக எந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளையும் நம்பாமல் முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றுவோம் என, நவீன ஆயுதங்களுடன் அவர்களை மறித்து நிற்கும் அரசின் அடியாட் களையும் (காவல்துறை), அரசையும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
பொய்மையால் பின்னப்படும் பார்ப்பனியம்: 7 ஆம் அறிவு திரைப்படத்தை முன்வைத்து...
'சாளரம்' போன்ற ஒரு முற்போக்கான இதழில் ஒரு வணிகத்' திரைப்படத்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நாம் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இது, இதழை நிறையப் பேரைப் படிக்க வைப்பதற்கான ஒரு 'வணிகத்தனமான' உத்தி என்றுகூட விமர்சிக்கப்படுவதுண்டு. இன்னும் சிலர் இப்படிச் சொல்வதுண்டு: திரைப்படத்தை எதிர்மறையாக விமர்சிப்பது கூட அந்தத் திரைப் படத்திற்கான விளம்பரமாகத்தான் ஆகிவிடுகிறது...
உண்மை அதுவல்ல. ஒரு முற்போக்கான இதழில், சமூக மாற்றத்திற்கான பணியிலிருக்கும் ஒரு இதழில் திரைப்படங்களை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விமர்சிப்பதன் நோக்கம் வேறு.
பால், மின், பேருந்துக் கட்டண உயர்வு ஜெயா அரசு மக்களுக்குத் தோண்டிய சவக்குழி - தலையங்கம்

கல்வி உரிமைச் சட்டம்: மற்றுமொரு ஏமாற்று திட்டம்
“இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து பிரிவு 45 இன் படி, 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அரசே இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி கொடுக்கும்” இந்தக் கூற்று ஏதோ இன்றைய அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அல்ல. 1950 ஆம் ஆண்டு இந்திய பிரதமராகப் பொறுப்பேற்ற நேருவால் சொல்லப்பட்டது. அவர் திருவாயால் சொன்னதை அவரும் நிறைவேற்றவில்லை, பின்னால்; மாறி மாறி ஆண்ட எந்த ஒரு கட்சியும் அதை கண்டுகொள்ளவே இல்லை.
வியாழன், டிசம்பர் 29, 2011
இடிந்தகரையில் ஒரு போராட்டம் - மனித குலத்தைக் காக்க...

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: உலக வங்கியின் கட்டளை! நாடகமாடும் கட்சிகள்!
இந்திய மக்களுக்கோர் நற்செய்தி!
இந்தியாவில் நுழையவிருந்த அந்நிய முதலீட்டை நிறுத்தி வைத்துவிட்டோம் என்று இங்கிருக்கக் கூடிய ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சிகள் நமது காதுகிழியத் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். அவர்களைச் சற்று ஓரந்தள்ளி வைத்து விட்டு, அவர்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் அந்நிய முதலீடுகளை ஆராய்ந்து பார்ப்பது உழைக்கும் மக்களாகிய நமக்கு அவசியமாகும்.
இந்திய விவசாய நாட்டில் இயற்கை விவசாயம் அழிக்கப்பட்டு வருவதையும், செயற்கை விதைகளின் மூலம் பல விவசாயிகள் அழிக்கப்பட்டு வருவதையும், மையப்படுத்துதல், நகரமயமாக்கல் என்கின்றப் பெயரில் நடந்தேறி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இவை அத்தோடு பா.ஜ.க. பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கென்றே தனியாக ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்தியதையும், போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம், சி.பி.ஐ, மேற்குவங்கத்தையும், கேரளாவையும் தனியாருக்கு திறந்து விட்டதையும், ஜெயா ஆற்று நீரைத் தாரை வார்த்துக் கொடுத்ததையும், கருணாநிதி நோக்கியாகளுக்கு சலுகைகளை அதிகமாக வழங்கியதை நினைவிலெடுத்துக் கொள்வதோடு, இந்தப் பன்றிக் கூட்டமானது தங்கள் நாடாளுமன்ற தொழுவத்தின் அரசியல் இலாப நட்டக் கணக்கைக் கொண்டே செயல்படுவார்கள் என்பதை நாம் கனவிலும் மறக்கக் கூடாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த மாத இதழ் முகப்பு

ஜூலை 2014