இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஜூலை 17, 2014

அழுகிப் போன கல்வி














மூளையும் உடலும் ஒட்டிப் பிணைந்து
ஓடுகிற வேகத்தில்
சூடேறிய பறைபோல்
 சகமக்களின் மூச்சுக்காற்று
அதிHவதைக் கேளுங்கள்!
உங்கள் ஒவ்வொருவருக்கும்
உழைத்து உழைத்து
களைத்துப் போனோம்!
எங்கள் பசிக்கு உணவு எங்கே?
எங்கள் புலன்களுக்கு சுவை எங்கே?
எங்கள் அறிவிற்கு இலக்கியம் எங்கே?
எங்கள் மனதிற்கு கலை எங்கே?

ஒரு மார்பில் பாலும்
மறு மார்பில் கல்வியும்
புசித்த எங்கள் செல்வங்களே!
எங்கள் நோய்க்கு மருந்து எங்கே?
இவர்கள் நமக்கு தாயல்லவா!
இவர்களின் கேள்விக்கு எதை பதிலாக்குவது?
அக்கறை இன்மையும், கண்டும் காணாமையும்
எத்தனை காலம் பதிலாக நீடிக்கும்?
நமக்கு ஏன் சமூகஅறிவு இருப்பதில்லை?

நான் மொழித்துறை மாணவன்
தமிழ் மட்டும்தான்...?
நான் அறிவியல்துறை மாணவன்
இயற்பியல் மட்டும்தான்...?
நான் தொழிற்துறை மாணவன்
பொறியியல் மட்டும்தான்...?
நான் கலைத்துறை மாணவன்
பொருளியல் மட்டும்தான்...?
இப்படி சொல்வதற்கு நாம்
என்ன தாயை மறக்கின்ற தருதலைகளா!
நெரிசல் இல்லாமல்
விபத்து நேராமல்
சமூகச் சாலையை
எப்படி கடப்பது?
வாழ்வை கற்பித்தல் கல்வியின் கடமை!
சமூகத்தைக் கற்றல் அறிவின் கடமை!
கடமையைக் கல்வி சாதிப்பதுண்டா?
சக நண்பர்களை போட்டியாளர்களாக
முறைக்கவைக்கிறது...
இயலாமைக்குள் மனித உணர்வை
இறுகவைக்கிறது...
போலி நட்பும், போலிச் சிரிப்பும்
மிளகும், உப்பும் பக்குவமாகத் துhவப்படுகிறது...
சமூக உணர்வு அறுக்கப்படுகிறது...
சமூக உண்மைகளைத் தலைகீழாக்கி
தனிமனிதனைத் தலைவனாக்கி
கண்டபடி சிரிக்கின்றது...
வகுப்பறையில் கல்வி நோக்கம்
அருவருப்பாய் நாறுகிறது...
சாதிக்க வேண்டியது சமூக மாற்றமே!
எதை மட்டும் படித்தால் என்ன
தனிமை மட்டும் உடையட்டும்
மாணவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
அறியாமைக்கு முலாம் இடும்
வகுப்பறைகளை இடிக்கலாம்...
வீதிகள் தோறும் கல்வி பெறலாம்...
நமக்கான வாழ்வு பாடப் புத்தகங்களிலில்லை
கல்லூரி வளாகங்களில் இல்லை
பரப்பரப்பான ஆடை அணிந்து
தெருக்களில் தான் திரிகிறது...
தேடலாம் வாருங்கள்!

-புதியவன்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014