இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், டிசம்பர் 29, 2011

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: உலக வங்கியின் கட்டளை! நாடகமாடும் கட்சிகள்!

இந்திய மக்களுக்கோர் நற்செய்தி!

இந்தியாவில் நுழையவிருந்த அந்நிய முதலீட்டை நிறுத்தி வைத்துவிட்டோம் என்று இங்கிருக்கக் கூடிய ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சிகள் நமது காதுகிழியத் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். அவர்களைச் சற்று ஓரந்தள்ளி வைத்து விட்டு, அவர்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் அந்நிய முதலீடுகளை ஆராய்ந்து பார்ப்பது உழைக்கும் மக்களாகிய நமக்கு அவசியமாகும்.

இந்திய விவசாய நாட்டில் இயற்கை விவசாயம் அழிக்கப்பட்டு வருவதையும், செயற்கை விதைகளின் மூலம் பல விவசாயிகள் அழிக்கப்பட்டு வருவதையும், மையப்படுத்துதல், நகரமயமாக்கல் என்கின்றப் பெயரில் நடந்தேறி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இவை அத்தோடு பா.ஜ.க. பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கென்றே தனியாக ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்தியதையும், போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம், சி.பி.ஐ, மேற்குவங்கத்தையும், கேரளாவையும் தனியாருக்கு திறந்து விட்டதையும், ஜெயா ஆற்று நீரைத் தாரை வார்த்துக் கொடுத்ததையும், கருணாநிதி நோக்கியாகளுக்கு சலுகைகளை அதிகமாக வழங்கியதை நினைவிலெடுத்துக் கொள்வதோடு, இந்தப் பன்றிக் கூட்டமானது தங்கள் நாடாளுமன்ற தொழுவத்தின் அரசியல் இலாப நட்டக் கணக்கைக் கொண்டே செயல்படுவார்கள் என்பதை நாம் கனவிலும் மறக்கக் கூடாது.


  ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை (Single brand) விற்பனை செய்ய 100% -மும், பல்பொருள் தயாரிப்பை (Multi brand) விற்பனை செய்ய 51 %-மும், நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பால் இது இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு முக்கியக் காரணம் வால்மார்ட் நிறுவனமானது அமெரிக்காவில் நடந்த தேர்தலுக்காக அதிக பணம் கொடுத்ததால் வால்மார்ட் நிறுவனத்தின் விசுவாசியும், அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருப்பவருமான அமெரிக்க உள்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்திய நாட்டைச் சேர்ந்த அமெரிக்க விசுவாசியும், அடிவருடியுமான மன்மோகன்சிங்குக்கு அழுத்தம் தந்து வருவதே ஆகும். அதோடு இன்றைய காலக்கட்டத்தில் உலகளவில் மிக பிரமாண்டமான 30 சந்தைகள் உருவாகி உள்ளன. அதில் இந்தியா ஒரு மாபெரும் சந்தையாக 2வது இடத்தில் இருக்கின்றது. இதில் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் களத்தில் உள்ளன. அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு மக்கள் உடல் நல வளர்ச்சி அடைய இது ஒரு வழி என்று கூறுகிறார்கள். இவர்கள் சொல்லும் உடல் நல வளர்ச்சியை சற்றுக் கீழே பார்ப்போம்.

பெப்சி, கோக், மிராண்டா, லிம்கா… போன்றவைகளில் பூச்சி கொல்லி மருந்துகள் உள்ளிட்ட கெடுதல் விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட பிறகும் அவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டம் செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாம்பழங்களை கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள், அது உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறி சந்தைக்கு வந்த பழங்களை சாலையில் கொட்டி அழிக்கும் அரசு, லேய்ஸ் (Lays) உள்ளிட்ட 'சிப்ஸ்” வகைகளில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் வேதிப் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் கூறுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட பிறகும், அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. மேலும் 'சிப்ஸ்” தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, பஞ்சாபில் பல உருளைக்கிழங்கு வகைகளை அழித்து, ஒரே வகை பி.டி. உருளைக்கிழங்குகளை பயிரிட விவாசாயிகளை ஒப்பந்த விவசாயம் மூலம் நிர்பந்தித்து வருகிறார்கள். அமெரிக்கா தன் நாட்டில் 2 ½ கோடியாக இருந்த விவசாயிகளைத் தற்போது வெறும் 10 சதவிகிதமாக குறைத்துள்ளது. இப்படிப்பட்ட நாட்டு மக்கள் மீதான அக்கறை நம்மை புல்லரிக்க வைக்கின்றது.

இந்தியாவில் சில்லறை வணிகமானது ஆண்டொன் றுக்கு 12 இலட்சம் கோடி ரூபாய் நடக்கிறது. இந்த சில்லறை வர்த்தகமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% ஆகும். மொத்த உள்நாட்டு தொழிளார்களில் 7 % பேர் இதைச் சார்ந்துள்ளனர். இந்தியாவின் பொருளாதாரத் தூண்களில் ஒன்றாக இத்தொழில் விளங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனை கடைகளின் எண்ணிக்கையானது 110 லட்சம் ஆகும். இதில் 500 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் வெறும் 4% தான். ஆனால் இங்கே நுழையவிருக்கும் வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு கடையானது சராசரியாக 85,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். சில்லறை வர்த்தகமானது 2003 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 44% ஆக உயர்ந்திருந்தது. அதாவது ரூ.11,00,000 கோடியாக இருந்த வளர்ச்சியானது ஆண்டொன்றுக்கு 49% உயர்ந்து வருகின்றது. இதில் உணவுபொருட்களின் விற்பனை மட்டும் 63% ஆகும். இப்போது 28 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கக்கூடும் எனப்படுகிறது.

விசன் 2025 என்ற பெயரில் அந்நிய முதலீடுகளை உள் நுழைத்து அதன் மூலம் தமிழகத்தை தொழில் நிறைந்த பகுதியாக மாற்றுவதே என்னுடைய கனவு என்று பாசிச ஜெயா அரசு தமிழக மக்களுக்கு துரோகத்தனமான திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றது. இந்த விசன் 2025 இல் திட்டத்தை கைவிட்டு, உள்நாட்டு சில்லறை வர்த்தகத்தின் அந்நிய முதலீட்டிற்கு போதுமான வசதிகள் செய்து தந்தாலே, 2025ல் அல்ல 2015 இலேயே அவர்கள் கனவு பலித்து விடும். நாமும் பலியாகி விடுவோம்.

அமெரிக்காவைச் சார்ந்த என்ரான் நிறுவனமானது மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் அமைக்க இந்திய வங்கிகளிடமிருந்து 40%-திற்கு மேல் நிதியுதவி பெற்றுள்ளது. ஆனால் அந்நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்ததைகளில் நடத்திய மோசடியின் காரணமாக கவிழ்ந்து விட, தபோல் மின்நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரான் நிறுவனத்திற்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன், வாராக் கடன் என்று தள்ளுபடி செய்யப்பட, அதனை இந்திய மக்களாகிய நாம் தான் சுமந்து வருகின்றோம்.

வால்மார்ட், என்ரான் போன்றே ஆப்பிள், போலோ, அபெர்க்ரோம்பீ, பெஸ்ட் பை, டெஸ்கோ, கேர்ஃபோர், ஸ்விடனின் எச் & எம், ஐகியா, ஜப்பானின் உனிக்டோ, பிரிட்டனின் டாப் ஷாப்  போன்றவை இந்திய உள்நாட்டுச் சந்தையை கைப்பற்ற போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

சில்லறை வர்ததகத்தில் அந்நிய முதலீட்டால் இந்தியத் தொழில் வளம் பெருகும் என்று கூறும் அண்டப் புளுகிகள் தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 10 வருடத்தில் 21 லட்சம் கோடி ரூபாய் வரி விலக்கு செய்தனர்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை இன்று பல்வேறு கட்சிகள் எதிர்ப்பதைப் போல நாடகம் ஆடினாலும், மத்தியில் உள்ள ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கருவியான மன்மோகன், ''எப்படியும் இந்தத் திட்டத்தை அமல் படுத்துவோம்”” என்று கூறி வருவதானது, இந்தியாவைப் புதிய காலனியாக்கும் திட்டத்தின் ஒரு கூறுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1990-களில் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதிலிருந்தே உலக வங்கியின் கட்டளைகளான அனைத்தையும் தனியார்மயமாக்குதல், எல்லாத் துறைகளிலும் 100 சதவிகிதம் அந்நிய முதலீடுகளை அனுமதித்தல் போன்றவற்றை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. அனுமதித்தே ஆக வேண்டும். மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டும் ஏற்றத்தாழ்வான ஒப்பந்தமான காட்ஸ் ஒப்பந்தத்தைக் கிழித்து போடும் போது இதற்கு தீர்வு கிடைக்கும். அதை இந்த அடிவருடிகள் எப்போதும் செய்யப் போவதில்லை.
- பார்த்திபன், கோவை

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014