
இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்
வியாழன், டிசம்பர் 29, 2011
இடிந்தகரையில் ஒரு போராட்டம் - மனித குலத்தைக் காக்க...

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: உலக வங்கியின் கட்டளை! நாடகமாடும் கட்சிகள்!
இந்திய மக்களுக்கோர் நற்செய்தி!
இந்தியாவில் நுழையவிருந்த அந்நிய முதலீட்டை நிறுத்தி வைத்துவிட்டோம் என்று இங்கிருக்கக் கூடிய ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சிகள் நமது காதுகிழியத் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். அவர்களைச் சற்று ஓரந்தள்ளி வைத்து விட்டு, அவர்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் அந்நிய முதலீடுகளை ஆராய்ந்து பார்ப்பது உழைக்கும் மக்களாகிய நமக்கு அவசியமாகும்.
இந்திய விவசாய நாட்டில் இயற்கை விவசாயம் அழிக்கப்பட்டு வருவதையும், செயற்கை விதைகளின் மூலம் பல விவசாயிகள் அழிக்கப்பட்டு வருவதையும், மையப்படுத்துதல், நகரமயமாக்கல் என்கின்றப் பெயரில் நடந்தேறி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இவை அத்தோடு பா.ஜ.க. பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கென்றே தனியாக ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்தியதையும், போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம், சி.பி.ஐ, மேற்குவங்கத்தையும், கேரளாவையும் தனியாருக்கு திறந்து விட்டதையும், ஜெயா ஆற்று நீரைத் தாரை வார்த்துக் கொடுத்ததையும், கருணாநிதி நோக்கியாகளுக்கு சலுகைகளை அதிகமாக வழங்கியதை நினைவிலெடுத்துக் கொள்வதோடு, இந்தப் பன்றிக் கூட்டமானது தங்கள் நாடாளுமன்ற தொழுவத்தின் அரசியல் இலாப நட்டக் கணக்கைக் கொண்டே செயல்படுவார்கள் என்பதை நாம் கனவிலும் மறக்கக் கூடாது.
முல்லைப் பெரியாறு அணையும் இந்திய, கேரள, தமிழக கட்சிகளும் - தலையங்கம்
முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டு, அங்கு புதிய அணை கட்டப்படும் என்ற கேரள அரசு சமீபகாலமாக திட்டமிட்டுப் பிரச்சினையைக் கிளப்பியது. அணையைச் சுற்றி வாழும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் பயத்தை காரணம் காட்டி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. 40 ஆண்டுகாலமாக சிறு, சிறு வெடிப்பாக இருந்த பிரச்சினை தற்பொழுது விஸ்வரூபம் எடுத்ததற்கும் முக்கிய காரணம் உண்டு. கேரளாவில் இன்று காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியாக உள்ள சி.பி.எம். கட்சியும் ஒரு சீட் வித்தியாசத்தில் மட்டுமே உள்ளன. மேலும் இந்த இரண்டு கட்சிகளுமே கேரள மக்களின் நம்பிக்கையைப் பெருவாரியாக இழந்துள்ளன. இன்று அந்த ஒரு சீட்டை கைப்பற்றுவதும், மக்களிடம் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளவும் இவர்களுக்கு தீனியாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. காங்கிரஸ், சி.பி.எம், பி.ஜே.பி என அங்குள்ள ஓட்;டுக்கட்சிகள் திட்டமிட்டு கேரளாவில் வாழும் தமிழர்களைத் தாக்குவதும், போராட்டங்களை நடத்துவதுமாக உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த மாத இதழ் முகப்பு

ஜூலை 2014