இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்
வியாழன், ஜூலை 17, 2014
ஞாயிறு, ஜனவரி 01, 2012
முல்லைப் பெரியாறு அணை: விறகாகும் மக்கள்.. குளிர்காயும் அரசுகள்...
இன்று தமிழகத்தை மிகப் பெரிய அளவில் உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. தமிழகத்தின் தென் பகுதிகளான தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக தன்னெழுச்சியாக எந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளையும் நம்பாமல் முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றுவோம் என, நவீன ஆயுதங்களுடன் அவர்களை மறித்து நிற்கும் அரசின் அடியாட் களையும் (காவல்துறை), அரசையும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
பொய்மையால் பின்னப்படும் பார்ப்பனியம்: 7 ஆம் அறிவு திரைப்படத்தை முன்வைத்து...
'சாளரம்' போன்ற ஒரு முற்போக்கான இதழில் ஒரு வணிகத்' திரைப்படத்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நாம் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இது, இதழை நிறையப் பேரைப் படிக்க வைப்பதற்கான ஒரு 'வணிகத்தனமான' உத்தி என்றுகூட விமர்சிக்கப்படுவதுண்டு. இன்னும் சிலர் இப்படிச் சொல்வதுண்டு: திரைப்படத்தை எதிர்மறையாக விமர்சிப்பது கூட அந்தத் திரைப் படத்திற்கான விளம்பரமாகத்தான் ஆகிவிடுகிறது...
உண்மை அதுவல்ல. ஒரு முற்போக்கான இதழில், சமூக மாற்றத்திற்கான பணியிலிருக்கும் ஒரு இதழில் திரைப்படங்களை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விமர்சிப்பதன் நோக்கம் வேறு.
பால், மின், பேருந்துக் கட்டண உயர்வு ஜெயா அரசு மக்களுக்குத் தோண்டிய சவக்குழி - தலையங்கம்
மக்களின் இன்றைய வாழ்க்கைக்கு மிக அத்தியாவசிய பொருட்களாகி விட்ட பால், பேருந்து, மின்சாரம் ஆகியவற்றின் மீது கடும் விலையேற்றத்தை திணித்து ஒட்டுமொத்த மக்களின் வயிற்றில் அடித்தது ஜெயா அரசு. பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பற்றவே இந்த விலைவாசி ஏற்றம் என பல புள்ளிவிவர நாடகங்களை முன் வைத்து இதை நியாயப்படுத்துகின்றது. ஆனால் உண்மை அவ்வாறாக இல்லை. மேலும் இது தமிழகத்தின் ஜெயா அரசின் விலையேற்றம் மட்டுமே அல்ல. மத்திய மன்மோகன் அரசு பெட்ரோல், உணவுப் பொருட்கள், எரிவாயு என மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீது விலை ஏற்றுவது பொதுத்துறை நிறுவனங்களை தவிர்த்து விடுவதும் என திட்டமிட்டு ஏற்படுத்துகிறது.கல்வி உரிமைச் சட்டம்: மற்றுமொரு ஏமாற்று திட்டம்
“இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து பிரிவு 45 இன் படி, 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அரசே இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி கொடுக்கும்” இந்தக் கூற்று ஏதோ இன்றைய அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அல்ல. 1950 ஆம் ஆண்டு இந்திய பிரதமராகப் பொறுப்பேற்ற நேருவால் சொல்லப்பட்டது. அவர் திருவாயால் சொன்னதை அவரும் நிறைவேற்றவில்லை, பின்னால்; மாறி மாறி ஆண்ட எந்த ஒரு கட்சியும் அதை கண்டுகொள்ளவே இல்லை.
வியாழன், டிசம்பர் 29, 2011
இடிந்தகரையில் ஒரு போராட்டம் - மனித குலத்தைக் காக்க...
பெரும் சர்ச்சையிலும் விவாதத்திலும் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு திருநெல்வேலி யிலிருந்து செல்லும் பாதையின் இரு மருங்கிலும் காற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகளைக் கடந்து செல்வதன் முரண் நகையினை பார்க்காமல் யாரும் முன்னே செல்ல முடியாது. இன்று அங்கு அணுமின் நிலையத்தை திறந்து வைத்துக் கொண்டு மக்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் முடிக்க அரசு திட்டமிட்டுக் கொண்டு இருக்கின்றது. அங்கு வாழும் இடிந்தகரை மற்றும் அப்பகுதியைச் சுற்றி வாழும் மக்கள் இந்த கூடங்குளம் அணு உலைக் கெதிராக பல காலமாக போராடி வருகின்றனர். இது 22 ஆண்டு களுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டம் ஆகும். கூடங்குளம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நடந்து வரும் போராட்டங்களையும், நட வடிக்கைகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் இந்த அரசு செய்யும் அப்பட்டமான பொய்களையும், அணு உலைக்கு தீர்வு என்ன என்பதையும் கவனிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: உலக வங்கியின் கட்டளை! நாடகமாடும் கட்சிகள்!
இந்திய மக்களுக்கோர் நற்செய்தி!
இந்தியாவில் நுழையவிருந்த அந்நிய முதலீட்டை நிறுத்தி வைத்துவிட்டோம் என்று இங்கிருக்கக் கூடிய ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சிகள் நமது காதுகிழியத் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். அவர்களைச் சற்று ஓரந்தள்ளி வைத்து விட்டு, அவர்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் அந்நிய முதலீடுகளை ஆராய்ந்து பார்ப்பது உழைக்கும் மக்களாகிய நமக்கு அவசியமாகும்.
இந்திய விவசாய நாட்டில் இயற்கை விவசாயம் அழிக்கப்பட்டு வருவதையும், செயற்கை விதைகளின் மூலம் பல விவசாயிகள் அழிக்கப்பட்டு வருவதையும், மையப்படுத்துதல், நகரமயமாக்கல் என்கின்றப் பெயரில் நடந்தேறி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இவை அத்தோடு பா.ஜ.க. பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கென்றே தனியாக ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்தியதையும், போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம், சி.பி.ஐ, மேற்குவங்கத்தையும், கேரளாவையும் தனியாருக்கு திறந்து விட்டதையும், ஜெயா ஆற்று நீரைத் தாரை வார்த்துக் கொடுத்ததையும், கருணாநிதி நோக்கியாகளுக்கு சலுகைகளை அதிகமாக வழங்கியதை நினைவிலெடுத்துக் கொள்வதோடு, இந்தப் பன்றிக் கூட்டமானது தங்கள் நாடாளுமன்ற தொழுவத்தின் அரசியல் இலாப நட்டக் கணக்கைக் கொண்டே செயல்படுவார்கள் என்பதை நாம் கனவிலும் மறக்கக் கூடாது.
முல்லைப் பெரியாறு அணையும் இந்திய, கேரள, தமிழக கட்சிகளும் - தலையங்கம்
முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டு, அங்கு புதிய அணை கட்டப்படும் என்ற கேரள அரசு சமீபகாலமாக திட்டமிட்டுப் பிரச்சினையைக் கிளப்பியது. அணையைச் சுற்றி வாழும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் பயத்தை காரணம் காட்டி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. 40 ஆண்டுகாலமாக சிறு, சிறு வெடிப்பாக இருந்த பிரச்சினை தற்பொழுது விஸ்வரூபம் எடுத்ததற்கும் முக்கிய காரணம் உண்டு. கேரளாவில் இன்று காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியாக உள்ள சி.பி.எம். கட்சியும் ஒரு சீட் வித்தியாசத்தில் மட்டுமே உள்ளன. மேலும் இந்த இரண்டு கட்சிகளுமே கேரள மக்களின் நம்பிக்கையைப் பெருவாரியாக இழந்துள்ளன. இன்று அந்த ஒரு சீட்டை கைப்பற்றுவதும், மக்களிடம் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளவும் இவர்களுக்கு தீனியாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. காங்கிரஸ், சி.பி.எம், பி.ஜே.பி என அங்குள்ள ஓட்;டுக்கட்சிகள் திட்டமிட்டு கேரளாவில் வாழும் தமிழர்களைத் தாக்குவதும், போராட்டங்களை நடத்துவதுமாக உள்ளனர்.
சனி, நவம்பர் 12, 2011
மூன்று தமிழர் விடுதலை: ஜெயா அரசின் நயவஞ்சக நாடகம்
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகளின் வாடை கூட நம்மை விட்டு இன்னும் விலகவில்லை. அதற்குள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் அரசுக்கெதிராக, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகமெங்கும் பொதுமக்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சனநாயக, முற்போக்கு அமைப்புகள் கடந்த பல மாதங்களாக மிகத் தீவிரமாக பல்வேறு வடிவங்களில் போராடினர். பொது மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் உச்சக்கட்டத்தை எட்டியபோது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி தனது இன்னுயிரை நீத்து போராட்டத்திற்கு ஆயுதமாக தன் உடலை தந்து போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கினார். பொய் சொல்ல எந்தக் கூச்சமும் இல்லாத ஜெயலலிதா, ஒரு மாபெரும் அண்டப்புழுகை மக்கள் நம்பும் வகையில் சொன்னார். வியாழன், நவம்பர் 10, 2011
பரமக்குடி பயங்கரம்: சாதி வெறியர்களுக்கு ஜெயா கொடுத்த நரபலி
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் சுற்றுக்கு விடப்பட்ட சில காணொளிகளும் (video) ஆவணப் படங்களும் ஈழப்போரின் கொடூரங்களை நமக்கு இரத்தமும் சதையுமாக காட்டின. கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிங்கள இனவெறியர்கள் இறந்த மிருகங்களின் உடல்களைப் போல இழுத்து வந்து வாகனங்களுக்குள் வீசும் கொடூரத்தைக் கண்டு தமிழ்ச் சமூகமே அதிர்ந்து போனோம்.
சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் குறைவான மக்கள் மத்தியில் மட்டும் சுற்றுக்குக் கிடைத்தன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் அதிலொரு பகுதி கலைஞர் தொலைக்காட்சியிலும் பலமுறை ஒளிபரப்பப்பட்டது. காவல்துறையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், துப்பாக்கி குண்டு துளைத்து இறந்து போய்விட்ட அல்லது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களின் உடல்களை மிருகங்களைப் போல தூக்கிவந்து சிறிய போலீஸ் வாகனத்திற்குள் திணித்து படாரென்று கதவைச் சாத்துவதையும், இறந்து போனவரின் வேட்டியை உருவி அவருடைய உடலுக்கே அதைப் போர்த்துவதையும், திருப்பி அடிக்க முடியாத தள்ளாத வயதுடைய முதியவரை, விரும்பிய காவலர்கள், அதிகாரிகள் எல்லாம் அடித்துச் சித்திரவதை செய்வதையும் கண்டு இந்தச் சமூகத்தின் சிறிய பிரிவினர் மட்டுமே குமுறினார்கள்.
சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் குறைவான மக்கள் மத்தியில் மட்டும் சுற்றுக்குக் கிடைத்தன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் அதிலொரு பகுதி கலைஞர் தொலைக்காட்சியிலும் பலமுறை ஒளிபரப்பப்பட்டது. காவல்துறையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், துப்பாக்கி குண்டு துளைத்து இறந்து போய்விட்ட அல்லது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களின் உடல்களை மிருகங்களைப் போல தூக்கிவந்து சிறிய போலீஸ் வாகனத்திற்குள் திணித்து படாரென்று கதவைச் சாத்துவதையும், இறந்து போனவரின் வேட்டியை உருவி அவருடைய உடலுக்கே அதைப் போர்த்துவதையும், திருப்பி அடிக்க முடியாத தள்ளாத வயதுடைய முதியவரை, விரும்பிய காவலர்கள், அதிகாரிகள் எல்லாம் அடித்துச் சித்திரவதை செய்வதையும் கண்டு இந்தச் சமூகத்தின் சிறிய பிரிவினர் மட்டுமே குமுறினார்கள்.
புதன், நவம்பர் 09, 2011
ஊழல்களின் மறுபக்கம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இஸ்ரோ ஊழல், எஸ்பேண்ட் ஊழல், உணவு தானிய ஊழல் என இன்றும் தொடர்ந்து கொண்டு போகும் அரசின் இலட்சம் கோடிகளின் ஊழல்களின் மத்தியில் 'ஊழல் இல்லா இந்தியா ஒளிமயமான இந்தியா', வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற முழக்கங்களையும், மத்திய அரசின் அறிக்கைகளையும் நாம் பத்திரிகை, செய்திகளில் பார்த்து வருகின்றோம். உண்மையில் இது போன்ற முழக்கங்களும், அன்னா அசாரேவின் லோக்பால் நடைமுறை, அத்வானி ரதயாத்திரை, ராம்தேவ் உண்ணாவிரதம் போன்றவைகளும், மத்திய அரசின் அறிக்கைகளும் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளா? இதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஊழலின் பிறப்பிடத் தையும், அவைகள் வளரும் முறைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இவைகள் நமக்கு நன்மையா? தீமையா? என்று புரிந்து கொள்வதோடு ஊழலை ஒழிப்பதற்கான நம்முடைய சரியான வழியையும் கண்டுகொள்ள முடியும்.
செவ்வாய், நவம்பர் 08, 2011
மனித உயிர் வைத்து சூதாடும் அணு உலை விற்பனை நிறுவனங்கள் - கூடங்குளம் அணு உலையின் பின்னணி
மின்வெட்டு... கடந்த சில ஆண்டுகளாக மின்சார வெட்டு எல்லா இடங்களிலும் நீக்கமற இருந்து வருகிறது. இரண்டு மணி நேரம் முதல் எட்டு மணி நேரத்திற்கு மேலாக நடப்பில் உள்ளது. அலுவலகப் பணியாளர்கள் பணி முழுவதும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கின்றனர். உற்பத்தி செய்ய இயலாமல் சிறு உற்பத்தியாளர்களும், வியாபாரம் செய்ய இயலாமல் சிறு வணிகர்களும் பாதிக்கப்படுகின்றனர். படிக்க முடியாமல் மாணவர்கள் அல்லல்படுகின்றனர் இப்படி அனைத்து தரப்பட்ட மக்களும் மின்வெட்டால் துன்பப்பட்டு வருகின்றனர்.
திங்கள், நவம்பர் 07, 2011
பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை... பாகம்-10
கடந்த இதழில், பாகம்-9 இல் சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்து, உற்பத்தி உறவுகளுடன் (சொத்துடைமை உறவுகளுடன்) முரண்படுவதையும், அதன் விளைவாக சமுதாய, பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதையும் பற்றி பார்த்தோம். இதன் விளைவாக ஏற்படும் அரசியல்-சமுதாயப் புரட்சி பழைய சமூக அமைப்பை மாற்றியமைத்து, அதனிடத்தில் புதிய சமூக அமைப்பை நிறுவும் என்பதையும் பார்த்தோம். இவ்வாறு, துவக்க காலத்தில் நிலவிய ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் மாற்றமடைந்து அடிமை உடைமைச் சமூகம் தோன்றியது பற்றியும் எஜமானர்கள் மற்றும் அடிமை வர்க்கங்களைக் கொண்டிருந்த அச்சமூக அமைப்பு எப்படி இருந்தது என்பது பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். இனி...
ஞாயிறு, நவம்பர் 06, 2011
வாகை சூட வா: வணிக சினிமா சொல்ல மறுத்த கதை
சமூக மாற்றத்திற்கான கலை வடிவங்களில் திரைப்படங்கள் பங்குகொண்ட காலங்கள் மாறி, வெறும் பொழுதுபோக்கிற்கான தளமாகவும், முதலீட்டுக்கான களமாகவும் மாறி இருக்கிறது. இது சமூகத்தில் உள்ள வியாபாரத்தின் (முதலாளித்துவத்தின்) தன்மையை காட்டுகிறது. இங்கே சமூகத்திற்குத் தேவையான திரைப்படங்கள் எளிதில் வருவதும் இல்லை, வந்தால் சொல்லக்கூடிய கருத்துக்களை தெரிவிக்க முழு உரிமையும் தணிக்கை வாரியத்தால் தரப்படுவதுமில்லை. இன்று பெருமளவு சமூகத்தில் மிகப்பெரும் சக்தியாக உள்ள ஊடகங்களும், திரைப்படங்களும் மக்களுக்கான தேவையைப் புரிந்து தனது வேலையைச் செய்வதில்லை. காரணம் இவைகள் மக்களைச் சுரண்டும் முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்க நலனை பார்க்கும் அரசு கையிலே தவழ்வதுதான்.
சனி, நவம்பர் 05, 2011
வால் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் ஆட்டம் காணும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
2008 இல் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தினால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். வீட்டை அடமானம் வைத்தவர்கள் வீடுகளை இழந்தனர். நம்முடைய ஊடகங்களால் சொர்க்கபுரிகளென வர்ணிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளில் மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் சாலையோரங்களிலும், பாலங்களின் அடியிலும், அட்டைபெட்டியிலும் உறங்கினர். படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் உணவுக்காகப் பிச்சையெடுத்தனர். இப்பொருளாதாரப் பெருமந்தத்தை ஏற்படுத்திய பெரும் வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மூலதன நிதியங்கள் ஆகிய கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்ற பல இலட்சம் கோடி டாலர்களை மக்கள் பணத்தை வாரி இறைத்த அரசுகள், தங்களின் கருவூலத்தை மீண்டும் நிரப்ப மக்களின் மீது அதிக வரிவிதிக்க ஆரம்பித்த பிறகு மேற்கு நாடுகளின் மக்கள் போராட்டம் வெடித்து எழுந்தது. ''மக்களின் பணத்தில் மக்களின் கடனை ரத்து செய்! பெருமுதலாளிகளுக்குக் கொடுக்காதே!" என்றும், ''பேராசைக்காரர்களான பெருமுதலாளிகளுக்கு வரியை போடு! உழைக்கும் மக்களுக்கல்ல!" என முழங்கினர்.
சனி, நவம்பர் 20, 2010
ஒபாமா இந்தியா வருகை: யாருக்கு நன்மை? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா?
கருப்புக் கொடிப் போராட்டங்கள், எதிர்ப்புச் சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், பந்த்களுக்கு இடையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியாவில் ஒரு 'நான்கு நாள் சுற்றுப் பயணத்தை' முடித்துவிட்டுச் சென்றுள்ளார். அமெரிக்கப் படைகளின் பாதுகாப்புடன், 250 க்கும் மேற்பட்ட அமெரிக்க முதலாளிகளுடன் (CEOs) வந்து ஒரு பொருளாதாரப் படையெடுப்பையே நடத்திவிட்டு சென்றுள்ளார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு நடத்தி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். நவம்பர் 6 ஆம் தேதி மும்பை வந்திறங்கிய ஒபாமா, அங்கு இந்திய, அமெரிக்க முதலாளிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மறுநாள் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் நவம்பர் 8 ஆம் தேதி டெல்லியில் மன்மொகன் சிங்கையும், பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேசினார். பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் பேசிவிட்டு மறுநாள் நவம்பர் 9 ஆம் தேதி இந்தோனேசியா கிளம்பிச் சென்றுவிட்டார் (தீபாவளி கொண்டாடியது, ஊர் சுற்றியது, மாணவர்களிடம் உரையாடியது, விதவிதமான உணவு உண்டது, காந்திக்கு அஞ்சலி செலுத்தியது போன்ற பத்திரிகைகளின் முன்பக்கங்களை அலங்கரித்த இதர செய்திகள் பற்றி விரிவாக சொல்லத் தேவையில்லை). இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகவே ஒபாமா இந்தியா வந்து சென்றுள்ளார்.
அயோத்தி: மரத்தடி தீர்ப்பு
வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி தீர்ப்பு சர்ச்சைக்குரிய இடம்தான் இராமர் பிறந்த இடம் என்று கூறியுள்ளது. இதுவரை இராமர் கோயிலைத் தேடிக்கொண்டிருந்த தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும் உறுதிபடுதர்த முடியாத இடத்தை இந்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். கற்பனைக்கு எட்டாத ஆண்டுகளுக்கு முன்பு, இராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடம், சர்ச்சைக்குரிய இந்த இடம்தான் என்று தீர்ப்பளித்த நீதிபதி தரம்சீர் சர்மாவை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஸ்பெக்ட்ரம்: ஊழலுக்கெல்லாம் 'இராசா
பெயரில் மட்டுமே முற்போக்கை வைத்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) ஊழல் உச்சபட்ச எல்லையை எட்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கீட்டில் முதல்வர் அசோக் சவான் ஊழல். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் முறைகேடு. ரூ.70,000 கோடி செலவில் நடத்திய காமன்வெல்த் போட்டியில் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கல்மாடி பல கோடி ஊழல். அடுத்ததாக '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா ரூ.1.76 இலட்சம் கோடி (ரூ.1,76,000,00,00,000) ஊழல்.
இந்தியக் கல்வி வரலாறு
1. பிராமணக் கல்வி முறையும், பௌத்தக் கல்வி முறையும்
நம் நாட்டில் 54 % மக்கள் 25 வயதுக்குட்பட்டோரே எனில், நம் நாடு இளைஞர்களின் நாடு என கூறலாம். ஆனால், இந்த இளைஞர்களின் நாட்டில் தான் உலகிலேயே அதிக கல்வி அறிவில்லாத மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவை விட மக்கள் தொகையில் பெரிய நாடான சீனா மற்றும் பல வறுமை தோய்ந்த நாடுகளில் 100 % கல்வியறிவை பலர் பத்தாண்டுகளுக்கு முன்னரே எட்டி விட்டனர். 63 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரம் வாங்கிவிட்டோம் என்று கூறிக்கொள்கிற நம் நாட்டிலோ, இன்றும் மூன்றில் இரண்டு பங்கு கூட கற்றவர்கள் என்ற நிலையை எட்ட முடியாமல் இருப்பது மிகவும் கேவலமானது, வெட்கப்படவேண்டியது இந்திய அரசின் அக்கறையற்ற தன்மைக்கு இது ஒரு நல்ல சான்று. உண்மையில் அரசால் அனைவருக்கும் கல்வி கொடுக்க முடியாத ஒரு மிகப்பெரிய கடினமான பணியா என்றால் இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இந்திய ஆளும் வர்க்கங்களின் தலைமைப் பாத்திரத்தில் இருக்கும் மேல்சாதிக்காரர்கள் அனை வருக்கும் கட்டாய கல்வியை வழங்க மறுத்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஒரே கருவியான கல்வியை பெற நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் நாம் எல்லோரும் இந்திய கல்வி வரலாறு பற்றிய ஒரு அடிப்படை புரிதல் ஏற்படுத்த வேண்டுமென்ற விருப்பத்தின் விளைவே இத்தொடர் கட்டுரை. ஏனெனில் வரலாற்றை அறியாதவன் வரலாற்றை படைக்க முடியாது. எனவே அனைவருக்கும் கட்டாய, இலவச, தாய்மொழிவழிக் கல்வி என்ற நிலையை ஏற்படுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராடி அறிவார்ந்த சமூகத்தைப் படைப்போம். அப்போராட்டத்திற்கு வித்தாக இந்திய கல்வி கல்வி வரலாறு பற்றி பார்ப்போம்.
எந்திரன்: கற்பனை வறட்சி
சமீபத்தில் 'கிராஃபிக்ஸ்' காட்சிகளுக்காக ஆஸ்கார் விருது பெற்ற ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார் படத்தை நிறைய பேர் பார்த்திருப்போம். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா அதில் குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டியடித்துவிட்டு, அவர்களது கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அது தொடர்பான ஒரு புனைகதைதான் 'அவதார்'. 'டைட்டானிக்', 'இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற அரசியலற்ற படங்களை எடுத்த ஜேம்ஸ் கேமரூனால் இப்படிப்பட்ட தீவிரமான அரசியல் படங்களையும் எடுக்க முடியும் என்று 'அவதார்' உணர்த்தியது. 'ஜுராசிக் பார்க்' போன்ற படங்களை எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பர்க்தான் நாஜிக்களின் கொடூரமான வதைமுகாம்களில் சித்திரவதைப்பட்ட யூதர்களைப் பற்றிய அருமையான படமான 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்'டையும் எடுத்தவர். 1993 இல் இப்படம் ஆஸ்கார் விருது பெற்றது. மெல் கிப்ஸனின் 'அப்போகலிப்டா' மாயன் பழங்குடிகளின் வரலாற்றை, அதன் அத்தனை யதார்த்தங்களோடும் அழகாக பதிவு செய்த ஒரு படம். இப்படி சில ஹாலிவுட் இயக்குநர்கள் உலக அரசியலையும், வரலாற்றையும் ஆழமாகப் படித்த, அரசியல் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். சில நல்ல படங்களையும் அவர்களால் எடுக்க முடிகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014














